பட்டாயா: "ஜூனியர்' உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில், இந்தியாவிற்கு இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
தாய்லாந்தின் பட்டாயாவில் இத்தொடர் நடந்தது. இந்தியாவின் பிரதீப் "பிரீஸ்டைல்' (50 கி.கி.,) பிரிவில் முதல் சுற்றில், அஜர்பெய்ஜான் வீரர் ரஸ்லனிடம் தோற்றார். ரஸ்லன் பைனலுக்கு முன்னேறியதால், பிரதீப்பிற்கு"ரெப்பிசேஜ்' வாய்ப்பு கிடைத்தது. இதில், ஜெர்மனியின் மார்க்கை வீழ்த்திய, பிரதீப் வெண்கலம் வென்றார்.
பெண்கள் பிரிவின் இந்தியாவின் இந்து சவுத்ரி, "ரெப்பிசேஜ்' பிரிவில் துருக்கியின் இவினை 3-1 என வென்று, வெண்கலம் பெற்றார்.



