1.மேசம்:;-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குப் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்..செப்டம்பர்10,11,12உற்றார் உறவினர்களின்
திடீர்வரவால் பொருட் செலவுகளும்,புதிய பொருப்புக்களும் உண்டாகலாம். வர வேண்டிய பூர்வீகச் சொத்துக்களில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பிரச்சனைகளில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்ல முடிவுகள் கிடைக்கும். செய் தொழிலில் புதிய கூட்டாழிகளால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.
செப்டம்பர்13,14மின்சாரம்,எரி பொருள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,கம்யுட்டர் சாதன வியாபாரிகள் இவற்றில் பணிபுரிவோர்கள்,இரசாயனம் மற்றும் அணு விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்
கள். பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபடுவோர்களுக்கு நல்ல லாபம் பெற போகும் காலமாகும்.மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படாமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும்.செப்டம்பர்15,16கூட்டுத் தொழிற் செய்வதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் வந்து சேரும்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருட் செலவுகளும்,மன நிம்மதி இன்மையும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.வெகு காலமாக வழி படாமல் விட்டுப் போன குலதெய்வ ஆலயங்களை தரிசனம் செய்வதற்கான காலமாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துரக்கை அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.
2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். செப்டம்பர்10,11விவசாயம் சுமாராகப் பலிதமாகும்.புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள்.
மஹான்களின் எதிர் பாராத ஆசிகளால் மன நிம்மதி அடைவீர்கள்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மனக் குழப்பங்கள் உண்டாகலாம்.
செப்டம்பர்12,13,14 மீன் முட்டை மாமிசம், எண்ணை,பெட்ரோல் டீசல் போன்ற வியாபாரிகள்,அணு சக்தித் துறை சார்ந்த விஞ்ஞானிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.உடம்பில் சளி அலர்ஜி போன்ற தொல்லைகள் வந்து போகும்.புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம்.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறு பாடுகள் நீங்கி மன நிம்மதி அடைவீர்கள்.செப்டம்பர்15,16வங்கிகளில் இருந்து வெகுகாலமாக எதிர் பார்த்து இருந்த உதவித் தொகை கிடைக்கும். உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகலாம். சொத்து விசயமாகக் கோர்ட் வழக்கு போன்றவற்றில் நல்ல சாதகமான முடிவுகளை எதிர் பார்க்க கால தாமதம் ஆகலாம்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். பொதுவாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் நல்லெண்ணை தீபம் இட்டு பிதுர்க்கள் மற்றும் காளி போன்ற அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.
3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்10,11அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.கட்டி முடிக்கப் படாத தடை பட்ட ஆலயப் பணிகளை மீண்டும் தொடர்ந்து செய்வீர்கள்.ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம்.செப்டம்பர்12,13,14யாத்திரையில் புதிய நட்புக்கள் உண்டாகி அவர்களால் எதிர் பாராத சிற்சில ஆதாயம் அடைவீர்கள்.உடம்பில் எலும்பு நரம்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம். இது நாள் வரையில் இருந்து வந்துள்ள பண நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காண்பதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். வீடு வாகனங்களை வாங்குவதற்கான புதிய முயற்சிகளில் ஈடு பட்டு வருவீர்கள்.செப்டம்பர்15,16வீடுகளில் அல்லது யாத்திரையின் போது பொருள் இழப்ப ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். காய்கறிகள் இலை கீரை போன்ற உணவு பொருள் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறை சார்ந்தவர்கள்,அழகுக் கலைக் கூடங்களை நடத்துபவர்கள்,சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்துபவர்கள்,நகைக் கடை நடத்துபவர்கள் ஆகியோர்கள் மிகுந்த நற்பலன்களை அடைவார்கள். பொதுவாக இது ஒரு ஆறுதல் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை.
இராசியான திசை:-தென்கிழக்கு.
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.
4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்10,11வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.தந்தையின் உடல் நிலை பாதிப்பால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.மற்றவர்களின் விசயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்த்தல் நல்லது. உடம்பில் வாயு வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.செப்டம்பர்12,13,14,15வீட்டை அலங்கரிப்பதிலும்,வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமும் பொருட் செலவுகள் ஏற்படலாம்.மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் மற்றும் பரிசு பாராட்டுக்களும் கிடைக்கும்.மாணவர்களுக்கு அரசு சம்பந்தமான உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பூஜைப் பொருள் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள்,இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்கம்யுட்டர் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்களைஅடைவார்கள்.செப்டம்பர்16பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பாராட்டு;களும் பொருள் வரவும் உண்டா
கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.
5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்10,11குடும்பத்தில் தந்தையின் மருத்துவச் செலவுகளுக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ளது.பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த சாதகமான முடிவுகள் கிடைக்கும்.மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.செப்டம்பர்12,13,14 யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமுடன் யாத்திரை சென்று வருதல் நல்லது. புதிய கடன் வாங்கிப் பழைய கடனை அடைக்க முயற்சிப்பீர்கள்.பிரிந்து போன உறவுகளுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ள காலமாகும்.நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த தீர்த்த யாத்திரைகள் சென்று வர வாய்ப்பு உள்ளது.செப்டம்பர்15,16தண்ணீர்,ஐஸ் போன்ற திரவப் பொருட்கள் மற்றும் குளிர் பான வியாபாரிகள்,உப்பு உரம் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர்கள் வியாபாரிகள்,நீர்வளத் துறை சார்ந்வர்கள்,கப்பல் பணி புரிவோர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். உடம்பில் வாயு வாத சம்பந்தமான தொல்லைகள் வந்து போகலாம்.மற்வர்களை நம்பிப் பணம் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.பொதுவாக இது ஒரு எச்சரிக்கை நிறைந்த வாரமாகும்.
இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.
6.கன்னி::-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்10,11குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்கள் சென்று வருவதன் மூலம் மன மகிழ்ச்சியை அடைவீர்கள்.வெளி நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைத் தேடி தாய் நாடு சென்று வரவுதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும்.. தேவையற்ற விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்காதிருங்கள்.செப்டம்பர்12,13,14வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் பணம் ஏமாற வேண்டாம்.புதிய வீடு வாகனங்களை வாங்கவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கைவந்து சேரும்.குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகள் வர இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றம் காண்பீர்கள்.செப்டம்பர்15,16யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.கார் லாரி போனற் வாகனத் தொழிற்சாலைகளில் பணி புரிவோர்கள்,அரசியல் வாதிகள,கமிசன் தரகு தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக வேறு மருத்துவர்களின் உதவிகளை நாடுவீர்கள்.பொதுவாக இது ஒரு எச்சரிக்கையான வாரமாகும்.
இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.
7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்10,11குடும்பத்தில் தேவையற்ற மனக் குழப்பங்கள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் இருத்தல் உகந்ததாகும்.யாத்திரைகளை சற்று தள்ளிப் போடவும்..விட்டுப் பேபான பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. செப்டம்பர்12,13துலை தூரப் பயணங்களை மேற் கொள்வதன் மூலம் எதிர் பார்த்த காரியங்களில் மன நிறைவடைவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள்.காதல் விசயங்களில் மற்றவர்களில் ஆதரவுகள் கிடைக்கும்.உத்தியோகத் துறையினருக்கப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றமும் மேலதிகாரிகளின் ஆதரவும் உண்டாய் இருக்கும்.செப்டம்பர்14,15,16வங்கித் தொழிலபுரிவோர்கள்,
வழக்கறிஞர்கள்,தபால் தந்தித் துறை சாரந்தவர்கள்,நோட்டு புத்தகம்,பேனா போன்ற ஸ்டேசனரி பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.உடம்பில் சளி மற்றும் சுர சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம்.பொதுச் சேவைகளான ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு நற் பெயர் எடுப்பீர்கள்.பொதுவாக இது ஒரு மனச் சந்தோசம் தரும் வாரமாகும்.பொதுவாக இது ஒரு மன நிம்மதி தரக்கூடிய வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு ஆலய வழிபாடு செய்து வரவும்.
8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குச் சனி நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்10,11யாத்திரையில் கவனம் தேவை.வங்கிகள் மூலமாக எதிர் பார்த்து இருந்த பண உதவிகள் கிடைப்பதற்கு சற்று கால தாமதம் ஆகலாம்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.பழைய வீடு வாகனங்களைப் பழுது பார்ப்தன் மூலமாகப் பொருட் செலவுகள் வந்து சேரும். நில புலன்கள் சம்பந்தமான பழைய வழக்குகள் மீண்டும் தொடரும்.செப்டம்பர்12,13,14,15காதல் விசயங்களில் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது..இரும்பு இயந்திரம் ,இரசாயனம்,பழைய பொருட்கள் முதலியன விற்பனை செய்வோர்கள்,இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள்,கமிசன் தொழிற் செய்வோர்கள்,பல சரக்கு மற்றும் பெட்ரோல் டீசல்,மண் எண்ணை போன்ற எண்ணை வியாபாரிகள் ஆகியோர்கள் நல்லபலனை அடைவார்கள்.உத்தியோகம் பாரப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடங்களுக்கு இட மாற்றம் ஏற்படலாம்.செப்டம்பர்16 ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற் சாலைகளைத் திருத்திக் கட்ட வாய்ப்பு உள்ளது.கை விட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். தீராத நாட் பட்ட நோய்களுக்கு புதிய மருத்துவரின் உதவிகளை நாடுவீர்கள். சூதாட்டங்களின் மூலம் பணம் கிடைக்கும் என நினைத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் எள்ளெண்ணை தீபம் இட்டு சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.
9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்10,11,12கணவன் மனைவி உறவுகளில் இது நாள் வரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.பொதுத் தொண்டுகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்வதன் மூலம் மன நிறைவை அடைவீர்கள். நீண்ட காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். சமுதாய முன்னேற்றப் பணிக்கான பொதுத் தொண்டுகளில் தலையிட்டு பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது.செப்டம்பர்13யாத்திரையின் போது மற்றவர்களிடம் முன் கோபம் தவிர்த்தல் நல்லதாகும்.செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.செப்டம்பர்14,15,16சேர் மார்க்கெட்,கமிசன் தரகு ஏஜன்சி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,மாமிச சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,அடகுக் கடை நடத்துபவர்கள்,பழைய பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். வெளி நாட்டில் இருந்து செய்திகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.நீண்ட காலமாக வர வேண்டிய பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் விநாயகர் ஆலய வழிபாடு செய்து வரவும்.
10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்10மஹான்களின் தரிசனங்களால் மன மகிழ்ச்சியோடு காரிய சித்தியும் அடைவீர்கள்.உடல் நிலையில் இது நாள் வரை இருந்து வந்துள்ள மருத்துவச் செலவுகள் சற்று குறையும்.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.செப்டம்பர11,12,13கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.அரசியல் வாதிகளால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று பொருமையுடன் இருத்தல் நல்லது.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எண்ணிய எண்ணங்கள் நிறை வேறும். நெருப்பு ராணுவம்,காவல் துறைகளைச் சார்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,எரி பொருள் வியாபாரிகள்,மசால் சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் தரக் கூடிய காலமாகும்.செப்டம்பர்14,15,16 உத்தியோகம் பார்ப்பவர்கள் தங்களது மேலதிகாரிகளுடன் மிகவும் பொறுமையுடன் பணி ஆற்றுதல் நல்லதாகும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும்.தேவையற்ற புதிய நட்புக்களால் மன நிம்மதி இழக்க வாய்ப்ப்பு உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்::-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.
11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்10,11மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெற வாய்ப்பு உள்ள காலமாகும்..வேற்று மதத்தவரால் வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம். ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம்.செப்டம்பர்12,13,14பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும்.அரசியல் வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது. அண்டை அயலார்களுடன் காரணமற்ற சிறிய விசயங்களுக்காக வீண் பிர்ச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது. தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல நெய்திகள் வந்து சேர இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம்.செப்டம்பர்15,16தாயின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும்.ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இவற்றில் பயிலும்
மாணவர்கள்,இசைத்துறை,சினிமா நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நறபலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி ஆலய வழிபாடு செய்து வரவும்.
12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்10,11மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப்படாதீர்கள்.பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழிலகளை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.செப்டம்பர்12,13புதிய கடனகள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது.ரேஸ் லாட்டரி போனற் திடீர் அதிர்~;டம் மூலம் ஒரு சிலருக்கு பண வரவுகள் உண்டாகும். சகோதர சகோதரிகளின் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் சம்பந்தமாகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். உடல் நிலையில் கண்காது போன்ற இடங்களில் கவனம் தேவை.வடக்குத் திசையில் இருந்து பெண்களால் எதிர்பாரத ஆதாயம் உண்டாகும்.செப்டம்பர்14,15,16குடும்ப சொத்து சம்பந்தமாகிய விசயங்களில் பெரிய மனிதர்களிடம் இருந்து எதிர் பாரத்த உதவிகள் கிடைக்கும். அநாதை ஆசிரமங்கள் நடத்துவோர்கள்,பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள்,ஆலயப் பணி புரிவோர்கள்,வங்கி எழுத்தாளர்கள்,அச்சுத்தொழிற் செய்வோர்கள்,பத்திரிக்கையாளர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,நாடகக் கலைஞர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் பாடலாசிரியர்கள் ஆகியோர்களுக்கு நற்பலன் தரக்கூடிய காலமாகும்.பொதுவாக இது ஒரு மகிழ்ச்சி தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு ஆலய வழிபாடு செய்த வரவும். தொடரும்!



