Tue06182013

Last update06:20:44 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா முன்னோட்டம் ஆச்சரியங்கள் திரைவிமர்சனம்

ஆச்சரியங்கள் திரைவிமர்சனம்

கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி, ஏகப்பட்ட திடீர் திருப்பங்களோட த்ரில்லிங்கான ஒரு வாழ்க்கை வேணும்!னு கேட்கற ஹீரோவுக்கு கடவுள் அதை உடனடியா கொடுக்கறாரு.

அதுக்கப்புறம் ஹீரோவோட வாழ்க்கையில தொடருது "ஆச்சரியங்கள்".

எம்.பி.ஏ., பட்டதாரி கார்த்திக்(தமன் குமார்). அவனுக்கு படிச்சு முடிச்சு, வேலைக்கு போய் சம்பாதிச்சு, கார் வாங்கி, கல்யாணம் பண்ணி, அப்பா ஆகுற வழக்கமான வாழ்க்கையை வாழ பிடிக்கலை. நண்பர்களோட சேர்ந்து சரக்கடிச்சுட்டு, மொட்டை மாடியில நின்னு கடவுளை கண்டபடி திட்டுற கார்த்திக், எனக்கு விறுவிறுப்பான வாழ்க்கையை கொடு, பின்னாடி நடக்கப் போறதை முன்கூட்டியே எனக்கு தெரிய வை!ன்னு ரெண்டு வரம் கேட்கறான். உடனே கார்த்திக்கோட மொபைலுக்கு கால் பண்ற கடவுள்(!), நீ கேட்ட வரத்தை கொடுத்துட்டேன். ஆனா, இதனால ஏற்படுற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை!ன்னு பீதியை கிளப்புறாரு. கூடவே, ஏதாவது ஒரு நம்பர் சொல்லுன்னு கடவுள் கேட்க, "இருபத்தச்சு"ன்னு பொத்தம் பொதுவா சொல்லி வைக்கிறான் கார்த்திக். நடந்த சம்பவங்கள் எதையும் ஒரு பொருட்டா நினைக்காத கார்த்திக் வாழ்க்கையில, அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்கள் ஏற்படுது. நல்ல வேலைக்குப் போய், கைநிறைய சம்பாதிச்சு, குடும்பத்தோட சந்தோஷமா இருந்திருக்க வேண்டிய கார்த்திக்கோட வாழ்க்கை... கொலை, கொள்ளை, கடத்தல்னு திசை மாறுது. இருபத்தைஞ்சு நாட்கள் கழிச்சு கார்த்திக் மொபைலுக்கு மறுபடியும் கால் பண்றாரு கடவுள். அதைத்தொடர்ந்து வருது... அடக்கடவுளே!னு கார்த்திக்கை அ‌லற வைக்கிற வித்தியாசமான க்ளைமாக்ஸ்.

சுவாரஸ்யமான கதை, திரைக்கதைக்காக மெனக்கெட்ட அளவுக்கு, மத்த விஷயங்களுக்காக இயக்குனர் மெனக்கெடலையோ!ன்னு தோணுது. நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்புல தெரியுற மெகா சீரியல் தன்மையை கொஞ்சம் சரி பண்ணியிருந்தா... "ஆச்சரியங்கள்" இன்னும் அதிகமாகவே கவனிக்கப்பட்டிருக்கும்.

"ஆச்சரியங்கள்" - "புதிய முயற்சி"

ரசிகன் குரல் - என்னது... கடவுள் கால் பண்றாரா...? அங்கேயும் டவர் நட்டுட்டீங்களாடா!