சமூக தளமாக செயற்படும் பேஸ்புக்கில் பல்வேறு வன்முறைகளைத் தூண்டுதல், ஆபாசங்கள் போன்ற பல்வேறு முறைகேடுகளும் இடம்பெறத்தான் செய்கின்றன.
இதனால் இத்தளத்தினை குழந்தைகள் பாவிப்பதற்கு பாதுகாப்பு அற்ற தளங்களுள் ஒன்றாக இதுவரை காலமும் கருதப்பட்டு வந்தது.
இதனால் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பேஸ்புக் தளத்தில் கணக்குகளை ஆரம்பித்து பாவனை செய்ய முடிந்துது.
எனினும் பேஸ்புக் தளம் மீதான குழந்தைகளின் ஆவலையும் நன்கு அறிந்து கொண்ட பேஸ்புக் தள வல்லுனர்கள், தற்போது குழந்தைகளும் பாவிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள Timeline இனை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் தகவல்களை தேவைக்கு ஏற்வாறு கட்டுப்படுத்தும் வசதி பெற்றுத் தரப்பட்டுள்ளது.


