Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் ரோகித்தின் புதிய "தோழி'

ரோகித்தின் புதிய "தோழி'

 

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவும், நடிகை சோபியா ஹயாத்தும் ஒன்றாக "ஊர்' சுற்றி வருகின்றனராம்.

 

இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்ய முடியாமல் தவித்து வருபவர் இளம்வீரர் ரோகித் சர்மா, 25. சமீபத்திய இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஐந்து போட்டிகளிலும் பங்கேற்ற இவர் எடுத்த மொத்த ரன்கள் 13 (5, 0, 0, 4, 4). இதனால் இவர் மீது இந்திய அணித் தேர்வாளர்கள் வைத்திருந்த நம்பிக்கையே போய்விட்டது.

புதிய தோழி:

ஆனால், இங்கிலாந்து-இந்திய நடிகை சோபியா ஹயாத்தின் நம்பிக்கையை, எப்படியோ பெற்று விட்டார் போல. "டைரி ஆப் எ பட்டர்பிளை' என்ற படத்தில் நடித்துள்ள சோபியா, "சூப்பர்ஸ்டட்' என்ற "டிவி' ரியாலிட்டி ÷ஷாவில் பங்கேற்றுள்ளார். இவருக்கும், ரோகித்துக்கும் எப்படியோ "நட்பு' ஏற்பட, அதிகமாக சுற்றத் துவங்கி விட்டனர்.

ஐந்து மணி நேரம்:

இதுகுறித்து வெளியான செய்தியில்," ரோகித், சோபியா இருவரும் ஒன்றாக இணைந்து அதிக நேரம் சுற்றுகின்றனர். பார்ட்டிகளுக்கு செல்வது, நண்பர்களை சந்திப்பது போன்ற விஷயங்களில் இருவரும் சேர்ந்து தான் செல்கின்றனர். சமீபத்தில் மேற்கு மும்பை பகுதியில் உள்ள பிரபலமான "ஜுகு' ஓட்டலுக்கு "காபி' குடிக்க என சென்றனராம். ஆனால், ஐந்து மணி நேரம் கழித்து தான் ஓட்டலை விட்டு வெளியே வந்துள்ளனர்,' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சோபியா கூறுகையில்,"" நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்,'' என்றார். சோபியாவின் நெருங்கிய தோழி மற்றும் நடிகை ஒருவர் கூறுகையில்,"" அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்,'' என்றார்.