நாட்டின் இறைமையை உறுதிப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் நாட்டுக்கு எவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்தாலும் அதனை முறியடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி காரணமாக சில நாடுகள் எம்மீது கோபமடைந்துள்ளன.
நாட்டின் ஒரு சில பகுதிகள் மட்டுமன்றி சகல பிரதேசங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பூகொட பிரதேசத்தில் நடைபெற்ற பொதுச் சந்தை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



