Sat05182013

Last update11:31:08 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா கிசுகிசு அனிரூத் -ஆன்ட்ரியா காதல் முறிவுக்கான காரணம்...!!

அனிரூத் -ஆன்ட்ரியா காதல் முறிவுக்கான காரணம்...!!

 

கோலிவுட்டே பற்றி எரிந்து கொண்டு இருக்கும் ஒரு ஹாட்டான மேட்டர் அனிருத்-ஆன்ட்ரியா முத்தக்காட்சி தான். கொலவெறி பாடல் மூலம் பிரபலமான 21 வயதான இசையமைப்பாளர்

அனிரூத்தும், 30 வயதான பாடகியும், நடிகையுமான ஆன்ட்ரியாவும் மிக நெருக்கமாக லிப்-டூ-லிப் முத்தக்காட்சி கொடுப்பது போன்ற படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணையதளம் முழுக்க வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதைப்பற்றி சம்பந்தப்பட்ட இருவரும் பெரிதாக எந்தவொரு ரியாக்ஷ்னும் காட்டவில்லை. ஆன்ட்ரியா ரொம்ப கூலாக இது 2 வருஷத்திற்கு முன்னாடி எடுத்தது. எங்களுக்குள் இருந்த உறவு முறிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். ஆன்ட்ரியா கூட கூலாக ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டார். ஆனால் அனிரூத்தோ இதுப்பற்றி இதுவரை இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். இதற்கு காரணமும் இருக்கிறது. அவர் பெரிய ஸ்டார்விட்டு உறவினரும் கூட. நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் தம்பி பையன் தான் இந்த அனிரூத். அதனால் தான் இந்த விஷயம் இணையதளங்களை தவிர மற்ற மீடியாக்களான செய்தித்தாள் மற்றும் வீடியோ ஊடகங்களில் பெரிதாகாமல் இருக்கிறது.

 

இந்நிலையில் அனிரூத்-ஆன்ட்ரியா இடையே காதல் இருந்தது உண்மை தான் என்றும், அவர்கள் காதல் முறிவுக்கான காரணமும் வெளியாகி இருக்கிறது. அதாவது ஆன்ட்ரியாவுக்கும், அனிரூத்துக்கும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பே நல்ல பழக்கமும், நெருக்கமும் இருந்ததாம். அப்போது அவர்கள் நெருக்கமாக இருந்த கா(காம)தல் படங்கள் தான் இப்போது வெளியாகி இருக்கிறதாம். ஆன்ட்ரியாவுக்கு டைரக்டர் செல்வராகவன் உள்ளிட்ட இன்னும் சிலருடன் காதல் இருந்ததாகவும், அந்த காதல் விஷயம் அனிரூத்துக்கு தெரியவந்ததால் தான் ஆன்ட்ரியாவுடான தனது காதலை முறித்து கொண்டதாகவும், மேலும் இவர்களது கா‌தல் முறிவுக்கு இன்னொரு முக்கிய காரணம் இருவருக்கும் இடையேயான 9வயது வித்தியாசமும் தான்  என்று கூறப்படுகிறது.

ஒருவேளை ஆன்ட்ரியாவுடனான காதல் தோல்வியால் தான் உருவானதோ ஒய்திஸ் கொலவெறி பாடல்...? அனிரூத்துக்கே வெளிச்சம்!!