Tue05212013

Last update04:27:02 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் உலகச்செய்திகள் பாக்.விமானப்படை தளம் மீது நள்ளிரவில் தலிபான்கள் பயங்கரதாக்குதல்: போர்விமானங்கள் சேதம்

பாக்.விமானப்படை தளம் மீது நள்ளிரவில் தலிபான்கள் பயங்கரதாக்குதல்: போர்விமானங்கள் சேதம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால்

பாகிஸ்தானின் போர் விமானங்கள் பல சேதமடைந்தன. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகர் அருகே பஞ்சாப் மாகாணத்தில் இருந்து 80 கி.மீ.தொலைவில் உள்ளகம்ராஎன பாகிஸ்தான் விமானப்படைத்தளம் ,தகுந்த பாதுகாப்புடன் உள்ள இந்த விமானப்படைத்தளத்தில் 30--க்கும் மேற்பட்ட போர்விமானஙகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் இந்த விமானப்படைதளம் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் ராணுவ சீருடையில் துப்பாக்கியுடன் புகுந்த 10 முதல் 15--க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்நடத்தினர். வெடிகுண்டுகளும் வீசப்பட்டதக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த தாக்குதலில் எப்-17 உள்ளிட்ட ஜெட்விமானம் எனப்படும் போர்விமானங்கள் பல சேதமடைந்தன.இது குறித்து டி.வி. சானல் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,பயங்கரவாதிகள் பஞ்சாப் மாகாணத்தின் பின்ட்- சுலைமான்- மக்கான் கிராமம் வழியாக , கம்ரா விமானபடை தளத்திற்குள் புகுந்துள்ளனர். இங்குள்ள கிராமவாசிகளின் உதவியுடன் தான் இவர்கள் விமானப்படைதளத்திற்குள் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் சம்பவம் நடந்து வருவதைஅறிந்ததும்,பாக். ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ராவல்பிண்டி நகரில் உள்ள ராணுவ வீரர்கள் ,கம்ராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றிருக்கலாம் எனவும், உயிர்சேதம் குறித்த தகவல்கள் இல்லை. பயங்கரவாதிகள் பாக். ராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த டி.வி. சானல் செய்தி வெளியி்ட்டுள்ளது.