ராசி குணங்கள் மேஷம்
இன்றைய தினம் திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-
மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். முன்கோபம், வீண் டென்ஷன் விலகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்
ராசி குணங்கள் ரிஷபம்
இன்றைய தினம் நம்பிக்கைக்குரியவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை
ராசி குணங்கள் மிதுனம்
இன்று மதியம் 1.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்ந்தாலும் திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகளை விடாமுயற்சியால் முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலையிலிருந்து மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்
ராசி குணங்கள் கடகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். மதியம் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்
ராசி குணங்கள் சிம்மம்
புதுமுயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். தலைச்சுற்றல், வயிற்றுவலி விலகும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பணவரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே
ராசி குணங்கள் கன்னி
எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளின் நினைவுத்துறன் பெறுகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை
ராசி குணங்கள் துலாம்
இன்றைய தினம் மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. பெற்றோரின் உடல் நிலை சீராக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மெரூண்
ராசி குணங்கள் விருச்சிகம்
இன்று மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். முன்கோபத்தை குறையுங்கள். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்-. உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ராசி குணங்கள் தனுசு
இன்றைய தினம் குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, சிவப்பு
ராசி குணங்கள் மகரம்
பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். கையில் காசு பணம் தேவையான அளவு புரளும். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நீண்டநாளாக நினைத்திருந்த காரியத்தை இப்பொழுது செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, சிவப்பு
ராசி குணங்கள் கும்பம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கையில் காசுபணம் புரளும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டாரம் விரியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், பிங்க்
ராசி குணங்கள் மீனம்
புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை


