Thu05232013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் ஐரோப்பா சிவந்தனின் உண்ணாவிரதம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

சிவந்தனின் உண்ணாவிரதம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

ஜூலை திங்கள் 22ஆம் நாள் ஒலிம்பிக் பூங்காவிற்கு அருகினில் அமைக்கப்பட்ட மேடையில் சரியாக மாலை 8:10 மணிக்கு கதிரையில் அமர்ந்து

தனது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு. கோபி சிவன்தான் அவர்களால் தொடங்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் 22 நாளாக தளராத மனதோடு தொடர்ந்து நேற்று (12.08.2012) ஒலிம்பிக் விளையாட்டு நிறைவு பெரும் பொது அவரின் உணவு தவிர்ப்பு போராட்டமும் நினைவு பெற்றது.!!

 

இன்று மாலை 4:00 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானிய அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்ட நிறைவு நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்காள் திரண்டு வந்தனர்.

தமிழீழ மண்ணின் விடிவிற்காய் வித்தான மாவீரர் செல்வங்களையும் சிங்கள இந்திய படைகளினால் கொல்லப்பட்ட அப்பாவி ஈழ மக்களையும் நெஞ்சில் சுமந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது, அதனை தொடர்ந்து முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயனந்தமூர்த்த்தி அவர்கள் சிவந்தனின் போராட்ட முக்கியத்துவத்தை மக்களிடம் பகிர்ந்துகொண்டார்.!

அதனை தொடர்ந்து தமிழீழ மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மா.தி.மு. பொதுசெயலாளர் வை. கோபாலசாமி அவர்கள் சிவந்தனின் தியாகத்தை வாழ்த்தி ஒலி வடிவம்:

அதன் பின்பு மாவீரர் பாடல் ஒற்று ஒலிக்க அனைவரும் எழுந்து நின்று கைகளில் தீபம் ஏற்றி அக வணக்கம் செலுத்தி, பின்னர் மாவீரர் கல்லறை மீதினில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின் மனிதநேயன் சிவந்தனுக்கு எஸ். ஜெயனந்தமூர்த்த்தி அவர்களும் சிவஜோகம் அம்மாவும் சேர்ந்து பழச்சாரு ஆந்த கொடுத்து சிவந்தனின் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்தனர்.

பின்னர் மனம் தளராத சிவந்தனின் உடல் பலம் இழந்தமையால், அவர் இருக்கையில் அமர்ந்துகொண்டே முன்னர் குழுமி இருந்த மக்களிடம் கதைக்க ஆரம்பித்தார். தன்னுடைய உணவு தவிர்ப்பு போராட்டம் மட்டுமே இன்று நிறைவு பெற்றது, நாம் தொடர்ந்து போராடவேண்டும், எமது மாவீரர்களின் கனவுகள் நிஜமாகும்வரை போராடவேண்டும் என்று கூறினார்.!

உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுபெற்றபின்னர், மருத்துவர்களால் மனிதநேயன் திரு. கோபி சிவன்தான் மருத்துவமணைக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னரே தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்ட இடத்திற்கு அனைவரும் அழைத்து சென்று பன்னாட்டு தலைவர்கள் ஒலிம்பிக் இறுதி நாள் விழாவிற்க்கு செல்லும் வழிகளின் நிற்று போராட்டத்தை மாலை மணி வரை தொடர்ந்தனர்.