பப்லு, தீபிகா, சங்கர்தாதா, பாக்ஸர் சூரி, சாரி, குள்ளநாராயணன், கத்தி இவங்க உதவியோட இயக்குநர் மாதேஷ் ரசிகர்களை மிரட்டுற(!) படம் மிரட்டல்.
ராயபுரம் பகுதியில் ரெண்டு தலைகள். ஒருத்தர் சிங்கர்தாதா(பிரபு). இன்னொருத்தர் பாக்ஸர்சூரி(பிரதீப் ராவத்). உன் எல்லையை நான் தாண்ட மாட்டேன். என் எல்லையை நீ தாண்டக்கூடாது!ன்னு ரெண்டு தரப்புக்கும் இடையில ஒரு ஒப்பந்தம். ஒப்பந்தத்தை மீறுற சங்கர்தாதாவோட ஆளை, போட்டுத்தள்ளுறான் பாக்ஸர் சூரியோட மகன். சூடாகுற சங்கர்தாதா பாக்ஸரோட மகனை போட்டுத் தள்ள... வெறியாகுற பாக்ஸர், சங்கர்தாதா தங்கச்சி தீபிகாவுக்கு(ஷர்மிளா) குறி வைக்கிறார். பாக்ஸர்கிட்ட இருந்து தன் தங்கச்சியை காப்பாத்த போராடுற சங்கர் தாதாவுக்கு உதவி செய்ற பப்லு(வினய்), தாதாவுக்கு தெரியாம அவர் தங்கச்சியை லவ்வி, திருட்டுத்தனமா கல்யாணமும் பண்ணிக்கிறான். இது எதுவுமே தெரியாம சுத்துற தாதா(!), கடைசியில பப்லுவுக்கே தன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வைக்கிறாரு. அப்ப வில்லன்? கடப்பாரையை வைச்சுட்டு க்ளைமாக்ஸ்ல சங்கர் தாதா பேசுற ஒரே ஒரு பஞ்ச் டயலாக்ல பட்ன்னு திருந்திடுறார்!
தங்கச்சி மேல பாச மழை பொழியுறுது, அவளைப் பார்த்தவன் கண்ணை நோண்டுறது, விபூதி வைச்சு விட்டவன் விரல் எடுக்கறதுன்னு தாதா செய்ற அட்டூழியங்கள் நெளிய வைக்குது. இது ஒருபக்கம்னா... தாலியை மறைச்சு தங்கச்சி ஆடுறதும், அதை அண்ணனோட சம்சாரம் கண்டுபிடிச்சு அலர்றதும், அப்பபுறம் அதை புருஷன்கிட்ட மறைக்கறதும், அதை அந்த ஆள் நம்புறதும், இது எதுவுமே தெரியாம வில்லன் எந்தநேரமும் கோடாரியை வைச்சு மரம் வெட்டிக்கிட்டே இருக்கறதும்... அய்யோ! கண்ணை கட்டுதுடா சாமி! புத்திசாலித்தனமா ஏமாத்தறதுதான் தில்லுமுல்லுன்னு இல்லாம, அடுத்தவன் சுலபமா ஏமாந்தா அதுவும்கூட தில்லுமுல்லு தான் கொஞ்சங்கூட கூச்சப்படாம சொல்லியிருக்காங்க! இந்த தில்லுமுல்லு(!) பொறுப்பை முழுமையா தோள்ல சுமந்துட்டு சுத்தற ஹீரோ வினய், அப்பப்போ பொறுப்பை இறக்கி வைச்சுட்டு ஹீரோயினையும் சுமக்கறாரு. அவ்வளவுதான்! ஆனா இத்தனையும் தாண்டி மிரட்டல் ருசிக்க காரணம்... சந்தானம். தூள் சந்தானம்!
மொத்தத்தில் "மிரட்டல்", "ஜாலியான மிரட்டல்"
ரசிகன் குரல் - ரொம்பநாள் கழிச்சு தமிழ் சினிமா க்ளைமாக்ஸ்ல வில்லன் திருந்துறான்ப்பா!


