Fri05242013

Last update06:25:13 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் வருகிறார் யுவராஜ்! * உலக கோப்பை "டுவென்டி-20' தொடரில் * இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு

வருகிறார் யுவராஜ்! * உலக கோப்பை "டுவென்டி-20' தொடரில் * இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு

 

மும்பை: "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் மீண்டும் இடம் பிடித்தார். "கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்ட இவர், சுமார் ஒரு ஆண்டுக்கு

பின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் செப்., 18ம் தேதி முதல் அக்., 7ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான இந்திய உத்தேச அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று மும்பையில் தேர்வு செய்யப்பட்டது.

யுவராஜ் தேர்வு:

"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு "ஆல்-ரவுண்டர்' யுவராஜை தேர்வு செய்வது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடந்தது. சமீபத்தில் நுரையீரலில் ஏற்பட்ட "கேன்சர்' கட்டியால் பாதிக்கப்பட் இவர் முழுமையாக குணமடைந்தார். பின் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு உடற்தகுதியை நிரூபித்தார். இதன் அடிப்படையில் இவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஹர்பஜன் வாய்ப்பு:

மோசமான "பார்ம்' காரணமாக தேசிய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பியுஸ் சாவ்லா, அஷ்வின் இடம் பெற்றனர்.

மீண்டும் பாலாஜி:

மூன்று ஆண்டுகளுக்கு பின் தமிழக வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி இடம் பிடித்துள்ளார். இஷாந்த் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களை தவிர அனுபவ ஜாகிர் கான், இர்பான் பதான் ஆகியோருடன் இளம் வீரர் அசோக் டிண்டாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, மனோஜ் திவாரிக்கும் இடம் கிடைத்துள்ளது.

எட்டு வீரர்கள்:

கடந்த 2007ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த முதலாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த கேப்டன் தோனி, காம்பிர், சேவக், யுவராஜ், ரோகித், இர்பான், சாவ்லா, ஹர்பஜன் ஆகிய 8 வீரர்கள் இம்முறையும் இடம் பிடித்துள்ளனர். சமீபத்திய வங்கதேச தொடருக்கு துணைக் கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். இத்தொடருக்கான துணைக் கேப்டன் பொறுப்பு, காம்பிருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதே வீரர்கள் அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள்(செப்., 8, 11) கொண்ட "டுவென்டி-20' தொடரிலும் விளையாடுகின்றனர்.

"டுவென்டி-20' தொடருக்கான இந்திய அணி: தோனி (கேப்டன்), காம்பிர் (துணைக் கேப்டன்), சேவக், ரெய்னா, கோஹ்லி, யுவராஜ், மனோஜ் திவாரி, ரோகித், இர்பான், அஷ்வின், பியுஸ் சாவ்லா, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, பாலாஜி, அசோக் டிண்டா.

லட்சுமண் தேர்வு :

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட் ஆக., 23ம் தேதி ஐதராபாத்தில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் பெங்களூருவில் ஆக., 31ம் தேதி ஆரம்பமாகிறது.

இத்தொடருக்கு அனுபவ வீரர் லட்சுமண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு மாத ஓய்வுக்கு பின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் களமிறங்க உள்ளார். அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தேர்வு செய்யப்படவில்லை. இவர்களை தவிர புஜாரா, அஜின்கியா ரகானே உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்ட இஷாந்த் சர்மா இடம் பிடித்துள்ளார். சுழலில் பிரக்யான் ஓஜா, பியுஸ் சாவ்லா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி: தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், லட்சுமண், சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, புஜாரா, அஜின்கியா ரகானே, அஷ்வின், பிரக்யான் ஓஜா, பியுஸ் சாவ்லா, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

மீண்டும் கோப்பை வெல்வோம்: ஸ்ரீகாந்த்

இந்திய வீரர்கள் தேர்வு குறித்து பி.சி.சி.ஐ., தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ""உலக கோப்பை (டுவென்டி-20) தொடருக்கு சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். இந்த அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் கோப்பை வென்று சாதிக்கும் என நம்புகிறோம். யுவராஜ் சிங் உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் தேசிய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவரது பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும். ஏனெனில் 2007ல் நடந்த முதலாவது உலக கோப்பை (டுவென்டி-20) மற்றும் 2011ல் நடந்த உலக கோப்பையில் (50 ஓவர்) தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். இதேபோல நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் திறமைøயான வீரர்களை தேர்வு செய்துள்ளோம். கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை பதிவு செய்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக எழுச்சி பெற்று தொடரைக் கைப்பற்றும் என நம்புகிறேன். இது எனது கடைசி தேசிய அணித் தேர்வாக அமையலாம். இதுவரை சிறந்த அணியை தேர்வு செய்துள்ளேன் என நினைக்கிறேன்,'' என்றார்.

யுவராஜ் பாக்ஸ்..........

அறிமுக உணர்வு

யுவராஜ் சிங் கூறுகையில்,""இந்திய அணியில் இப்போது தான் அறிமுகமாகப் போவதை போல உணர்கிறேன். எனது இரண்டாவது "இன்னிங்ஸ்' தொடங்கியுள்ளது. "டுவென்டி-20' தான், நான் மீண்டும் போட்டியில் பங்கேற்பதற்கு மிகச் சரியானது. 50 ஓவர் அல்லது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவுக்கு இன்னும் உடற்தகுதி பெறவில்லை. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், என் தாயார் தெரு முழுவதும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்,''என்றார்.

 

Entertainment