குப்பி படத்தை இயக்கிய கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி உள்ள படம் வீரப்பன் அட்டகாசா இது வனயுத்தம் என்ற பெயரில் தமிழிலும் வெளிவருகிறது. சந்தனக் கடத்தல்
வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய சம்பவமும், வீரப்பன் என்கவுண்டர் செய்யப்பட்டதும் முக்கிய பகுதியியா இடம் பெறுகிறது. வீரப்பனாக கன்னட நடிகர் கிஷோர் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி விஜயகுமாராக அர்ஜுன் நடிக்கிறார். வீரப்பன் கூட்டத்தில் இருந்த சிலரும், வீரப்பனை பிடிக்கும் அதிரடிப் படையில் இருந்த சிலரும் இதில் நடிக்கிறார்கள்.
வீரப்பன் எண்கவுண்டர் செய்யப்பட்டபோது தமிழக முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் வீரப்பனை பிடிக்க போலீஸ் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவது போலவும், வீரப்பனை பிடிக்க உத்தரவு போடுவது போலவும் சில காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது. இதில் முதல்வர் ஜெயலிதாவாக முன்னாள் ஹீரோயின் ஜெயசித்ரா நடித்துள்ளார். அப்போது முதல்வர் அணிந்திருந்து போன்ற உடைகள் அணிந்தும், அப்போதைய அவரது தோற்றத்துடன் நடித்திருக்கிறார்.


