Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு பொது வீழ்ந்தார் விஜேந்தர்! * பதக்க கனவு அம்போ

வீழ்ந்தார் விஜேந்தர்! * பதக்க கனவு அம்போ

 

லண்டன்: ஒலிம்பிக் குத்துச்சண்டையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் விஜேந்தர் சிங், காலிறுதியில் வீழ்ந்தார். இதன் மூலம் மீண்டும் பதக்க வெல்லும் இவரது கனவு

தகர்ந்தது.

 

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான குத்துச்சண்டை "மிடில் வெயிட்' 75 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் விஜேந்தர் சிங், உஸ்பெகிஸ்தானின் அபாஸ் அடோயிவ் மோதினர். கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் மீண்டும் அசத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

பரபரப்பான முதல் சுற்றில் இருவரும் தலா 3 புள்ளிகள் பெற்றனர். பின் இரண்டாவது சுற்றில் எழுச்சி கண்ட அடோயிவ் 7 புள்ளிகள் பெற்றார். இதில் விஜேந்தருக்கு 5 புள்ளிகள் மட்டும் கிடைத்ததால் 8-10 என பின்னடைவை சந்தித்தார். மூன்றாவது சுற்றில் மீண்டும் சொதப்பிய விஜேந்தர் 5 புள்ளிகள் மட்டும் பெற்றார். இதில் உஸ்பெகிஸ்தான் வீரருக்கு 7 புள்ளிகள் கிடைத்தன. இறுதியில் விஜேந்தர் சிங் 13-17 என்ற கணக்கில் தோல்வி அடைந்து, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

ரஞ்சித் சொதப்பல்:

ஆண்களுக்கான "டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்தியா சார்பில் ரஞ்சித் மகேஸ்வரி பங்கேற்றார். இதில் இவருக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்பிலும் தவறுதலாக தாண்டியதால், பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறினார்.

""இனிவரும் போட்டிகளில் "லைட் ஹெவி வெயிட்' பிரிவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்,'' என, இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் குத்துச்சடை "மிடில் வெயிட்' 75 கி.கி., எடைப்பிரிவில் இந்திய வீரர் விஜேந்தர் சிங் காலிறுதி வரை முன்னேறினார். காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் அபாஸ் அடோயிவிடம் தோல்வி அடைந்தார்.

இதுகுறித்து விஜேந்தர் சிங் கூறியது: லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. காலிறுதியில் 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் தோல்வி அடைந்தேன். இதற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

இப்போட்டியில் சில தவறுகள் செய்தேன். இதனால் தோல்வி அடைந்தேன். விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம். அனைத்து போட்டியிலும் வெற்றியை மட்டும் பெற முடியாது. சில சமயங்களில் தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மீண்டும் அபாஸ் அடோயிவிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், இப்போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றி பெறுவேன்.

கடந்த ஆறு ஆண்டுகளான "மிடில் வெயிட்' பிரிவில் விளையாடினேன். இனிவரும் போட்டிகளில் "லைட் ஹெவி வெயிட்' 81 கி.கி., எடைப்பிரிவில் விளையாட முடிவு செய்துள்ளேன். இப்பிரிவில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஒலிம்பிக்கில் இப்பிரிவில் இந்தியாவுக்காக விளையாடுவேன்.

இவ்வாறு விஜேந்தர் சிங் கூறினார்.