தங்கர்பச்சான் இயக்கி வரும், "அம்மாவின் கைபேசி படத்தில், சாந்தனு-இனியாவுக்கு இடையே, உதட்டு முத்தக் காட்சி இடம் பெற்றிருப்பதாக, கோலிவுட்டில் சூடான செய்தி பரவி உள்ளது.
ஆனால், பட நாயகனான சாந்தனுவிடம் இதுகுறித்து கேட்டால், "இந்தப் படம், அன்பு, பாசம், காதல் கலந்து, ஒரு கவிதை போன்று உருவாகி உள்ளது. இதில், அசைவ காட்சிகளுக்கு இடமே இல்லை. அதனால், இந்த செய்தி வெறும் வதந்தியே, என்கிறார். மேலும், "இந்தப் படம், என்னை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதற்கு அறிகுறியாக, நானே எதிர்பார்க்காத சில முன்னணி டைரக்டர்கள், வித்தியாசமான கதைகளில் என்னை நடிக்க வைக்க முன்வந்துள்ளனர், என்கிறார் சாந்தனு


