Tue06182013

Last update05:21:18 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா சினிமா செய்திகள் வாய்ப்பு தேடும் திவ்யா பண்டாரி!

வாய்ப்பு தேடும் திவ்யா பண்டாரி!

 

இயக்குனர் ஏ.எம்.ரத்தினத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. இவர் உனக்கு 20 எனக்கு 18, கேடி, ஊலலலா ஆகிய படங்களை இயக்கினார். இலியானா, தமன்னா, த்ரிஷா போன்றவர்களை

இவர்தான் அறிமுகப்படுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய ஊலலலா படத்தில் அறிமுகமானவர் திவ்யா பண்டாரி. ஜோதிகிருஷ்ணா அறிமுகப்படுத்திய நடிகைகள் புகழின் உச்சியில் இருப்பதால் தானும் அதுபோல ஆகிவிடலாம் என்ற கனவோடுதான் திவ்யாவும் அறிமுகமானார். அதனால் படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குனர் ஜோதிகிருஷ்ணாவோடு நெருக்கமாகவே நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. படமும் வெற்றிபெறவில்லை. இவரும் புகழ் பெறவில்லை. ஏமாற்றம் அடைந்த திவ்யா தனது சொந்த ஊரான மும்பைக்கே சென்று விட்டார். ஆனாலும் சினிமா ஆசை யாரை விட்டது.

 

மீண்டும் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்திருக்கிறார். இங்குள்ள பிரபலமான போட்டோ ஸ்டூடியோவில் விதவிதமாக போஸ் கொடுத்து ஒரு போட்டோ ஆல்பம் ஒன்றை தயார் செய்தார். அதனை பத்திரிகையாளர்களுக்கும், பிரபலமான தயாரிப்பு கம்பெனிகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். அதோடு அவர்களுக்கு "நான் தற்போது பிரபல கம்பெனிகளின் விளம்பரத்தில் நடித்திருக்கிறேன். அதில் என் அழகையும், நடிப்பையும் பாருங்கள்" என்ற தகவலை சொல்லியிருக்கிறார்.

சினிமாவில் எதுவும் நடக்கலாம். உனக்கு 20 எனக்கு 18 படத்தில் த்ரிஷா ரிச் கேர்ளாகத்தான் அறிமுகமானார். அவர் பிற்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வரவில்லையா-? அதுபோல திவ்வாய பண்டாரியும் வரலாம்.