Tue05212013

Last update11:58:53 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு மற்றயவை பைனல் வாய்ப்பை இழந்தார் செய்னா * வெண்கலத்துக்காக இன்று போராட்டம்

பைனல் வாய்ப்பை இழந்தார் செய்னா * வெண்கலத்துக்காக இன்று போராட்டம்

 

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் தோல்வி அடைந்து ஏமாற்றினார். இன்று நடக்கவுள்ள மூன்றாவது இடத்துக்கான

போட்டியில் செய்னா வெற்றி பெறும் பட்சத்தில் வெண்கலம் வென்று புதிய வரலாறு படைக்கலாம்.

 

லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல் (நம்பர்-5), உலகின் "நம்பர்-1' வீராங்கனையான சீனாவின் இகான் வாங்கை சந்தித்தார். துவக்கத்தில் இருந்தே படுமந்தமாக விளையாடிய செய்னா, நிறைய தவறுகள் செய்தார். இதனால் முதல் செட்டை இகான் வாங் 21-13 என மிகச் சுலபமாக கைப்பற்றினார்.

ஆறாவது தோல்வி:

இரண்டாவது செட்டில் எழுச்சி கண்ட செய்னா ஒரு கட்டத்தில் 11-10 என முன்னிலை வகித்தார். ஆனால் இது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் சொதப்பிய செய்னா இரண்டாவது செட்டை 13-21 என மீண்டும் கோட்டைவிட்டார். சுமார் 42 நிமிடங்கள் வரை நீடித்த இப்போட்டியில் செய்னா 13-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். இதன்மூலம் செய்னா நேவல், இகான் வாங்கிடம் தொடர்ந்து ஆறாவது முறையாக தோல்வி அடைந்தார்.

வெண்கல வாய்ப்பு:

இருப்பினும் செய்னாவுக்கு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கவுள்ள வெண்கலப் பதக்கத்திற்கான (3வது இடம்) போட்டியில் செய்னா, உலகின் "நம்பர்-2' வீராங்கனையான சீனாவின் ஜின் வாங்கை சந்திக்கிறார். முன்னதாக இவர்கள் ஆறு முறை மோதி உள்ளனர். இதில் செய்னா 2, ஜின் வாங் 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த ஆண்டு நடந்த உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் தொடரின் "பி' பிரிவு லீக் போட்டியில் செய்னா 21-17, 22-20 என்ற நேர் செட் கணக்கில் ஜின் வாங்கை வீழ்த்தினார். இன்றைய போட்டியில் செய்னா நேவல் வெற்றி பெறும் பட்சத்தில் ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைக்கலாம்.

ஓம் பிரகாஷ் "அவுட்':

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியின் பைனலுக்கான தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் ஓம் பிரகாஷ் சிங் பங்கேற்றார். இவருக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்பில் அதிகபட்சமாக 19.86 மீ., தூரம் எறிந்து 19வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

மயூகா ஜானி தோல்வி:

பெண்களுக்கான "டிரிபிள் ஜம்ப்' போட்டியின் பைனலுக்கான தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் மயூகா ஜானி பங்கேற்றார். இவருக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்பில் அதிகபட்சமாக 13.77 மீ., தூரம் தாண்டி 22வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.