டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்த பா.ரஞ்சித் இயக்கும் முதல் படம் அட்ட கத்தி. ஒரு அட்டகத்தி தன்னை வெட்டுக்கத்தியாக நினைத்துக் கொண்டால் என்ன நடக்கும்
என்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. சென்னையின் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இப்படத்தின் நாயகனாக நடிக்க கிட்டத்தட்ட ஆறு பேரை தேர்ந்தெடுத்து அதில் தினேஷ் என்பவரை நடிக்க வைத்துள்ளனர். நாயகியாக ஸ்வேதா என்ற கன்னடத்துப்பெண் நடிக்கிறார். ஸ்வேதா கன்னடம் என்றாலும் தமிழ் சரளமாக பேசக்கூடியவர். இவர்களுடன் மானாட மயிலாடா ஐஸ்வர்யா, அஞ்சாதே படத்தில் சிறுமிகளாக நடித்த ஷோபி, ஷாலி ஆகியோரும் நடிக்கின்றனர்.
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரஞ்சித். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ப்ரமோத் வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை புறநகர் சுற்றியே படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. சூட்டிங் எல்லாம் முடிந்து ஆகஸ்ட் 15ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.


