Sat05252013

Last update04:01:05 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா சினிமா செய்திகள் வெங்கட்பிரபுவின் பிரியாணியில் நடிகை டயானா பென்டி!

வெங்கட்பிரபுவின் பிரியாணியில் நடிகை டயானா பென்டி!

மங்காத்தா படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படமான பிரியாணியில் காக்டெயில் நாயகி டயானா பென்டி நடிக்கவிருப்பதாக தகவல்கள்

வெளியாகியுள்ளன. நடிகர் கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒஸ்தி நாயகி ரிச்சா நடிக்கிறார். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த கலவையாக படம் உருவாக இருக்கிறது. கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் என்பதால் ரிச்சாவைத் தொடர்ந்து மற்றொரு நாயகியாக சமந்தா அல்லது இலியானாவை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில் இரண்டாவது நாயகியாக காக்டெயில் நாயகி டயானா பென்டி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முயற்சியில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Entertainment