Tue06182013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு மற்றயவை முதல் தங்கம் வென்றது சீனா! * இந்தியர்கள் ஏமாற்றம்

முதல் தங்கம் வென்றது சீனா! * இந்தியர்கள் ஏமாற்றம்

லண்டன்:லண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்று சாதித்தது சீனா. பெண்களுக்கான 10 மீ., "ஏர் ரைபிள்' துப்பாக்கி சுடுதலில் சீனாவின் சிலிங் யி தங்கம் வென்று

அசத்தினார். துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடிய இந்திய நட்சத்திரங்கள் தோல்வி அடைந்து ஏமாற்றினர். பாட்மின்டன் வீரர் காஷ்யப் மட்டும் வெற்றி பெற்று ஆறுதல் தந்தார்.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக துவங்கியது. வாண வேடிக்கை, வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு, நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சி என லண்டன் நகரமே திருவிழா கோலம் பூண்டது. நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீ., "ஏர் ரைபிள்' துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனாவின் சிலிங் யி 502.9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றார். வெள்ளி பதக்கத்தை போலந்தின் சில்வியா போகாக்கா (502.2 புள்ளி), வெண்கலப் பதக்கத்தை சீனாவின் டான் யு (501.5 புள்ளி) பெற்றனர்.

இந்தியா "அவுட்': வில்வித்தை ஆண்கள் அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இந்தியா சார்பில் தருண்தீப் ராய், ராகுல் பானர்ஜி, ஜெயந்தா தலுக்தார் பங்கேற்றனர். இப்போட்டி 214-214 என சமநிலை அடைந்தது. இதனால் இரு அணியினருக்கும் "டை பிரேக்கர்' வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இந்திய வீரர்கள் சொதப்ப 27-29 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினர்.

ஜுவாலா ஜோடி ஏமாற்றம்: பாட்மின்டன் கலப்பு இரட்டையர் "சி' பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, திஜு ஜோடி, இந்தோனேஷியாவின் டான்டோவி அகமது, லிலியானா நாட்சிர் ஜோடியிடம் 16-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இத்தோல்வியின் மூலம் ஜூவாலா-திஜு ஜோடி காலிறுதிக்கு முன்னேற, அடுத்து நடக்கவுள்ள டென்மார்க் மற்றும் தென் கொரியா அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

சுவர்ன் சிங் வாய்ப்பு: துடுப்பு படகு ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுவர்ன் சிங் விர்க் பங்கேற்றார். இதில் பந்தய தூரத்தை 6 நிமிடம் 54.04 வினாடிகளில் கடந்த சுவர்ன் சிங், 4வது இடம் பிடித்தார். இருப்பினும் காலிறுதிக்கு முன்னேற இன்னும் ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது. இன்று நடக்கவுள்ள போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதிக்கு தகுதி பெறலாம்.

அன்கிடா தோல்வி: டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிடா தாஸ், ஸ்பெயினின் சாரா ராமிரசை சந்தித்தார். இதில் அன்கிடா தாஸ் 9-11, 8-11, 7-11, 11-8, 2-11 (1-4) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

விஜய் குமார் ஏமாற்றம்: துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீ., "ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்று நடந்தது. இந்தியா சார்பில் விளையாடிய விஜய் குமார் 570 புள்ளிகள் பெற்று 31வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

காஷ்யப் ஆறுதல் வெற்றி

பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் "டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், பெல்ஜியத்தின் யுகான் டானை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய காஷ்யப் 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஜூலை 31ம் தேதி நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் காஷ்யப், வியட்னாம் வீரர் டியன் மின்க் நுகுயனை சந்திக்க உள்ளார்.