ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடா முதன்மையான நாடாக ஜொலிக்கிறது என பிரான்சிலிருந்து வெளியாகும் L’Express செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அச்செய்தியில், பிரான்சில் வாழும் மக்கள் கியூபெக் மட்டுமல்லாமல், கனடாவின் எந்த பகுதிக்கு சென்றாலும் வளமான வாழ்க்கையை வாழ முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து உலக நாடுகளும் கனடாவில் இயற்கையாக உருவாக்கப்பட்ட பொருட்களை வாங்க விரும்புவதாகவும், இந்த நிலை நீடித்தால் கனடா உலக அரங்கில் மிகச் சிறந்து விளங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் திடமான பொருளாதார நிலையைக் கொண்டுள்ள குறிப்பிடத்தக்க சில நாடுகளில் கனடாவும் ஒன்று என்று பல வல்லுநர்கள் கூறியுள்ளனர் என்றும், அதற்கான காரணங்களும் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார ரீதியில் கனடா சிறந்து விளங்குவதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



