Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் இந்தியாவுக்கு மீண்டும் "நம்பர்-1' வாய்ப்பு

இந்தியாவுக்கு மீண்டும் "நம்பர்-1' வாய்ப்பு

துபாய்: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக வெல்லும் பட்சத்தில், ஐ.சி.சி., "ரேங்கிங்' பட்டியலில் மீண்டும் "நம்பர்-1' இடத்தை பிடிக்கலாம்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சமீபத்தில் வெளிட்ட ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (119), தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (118) அணிகள் "டாப்-3' வரிசையில் உள்ளன. இப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை அம்பாந்தோட்டாவில் நடக்கவுள்ளது. இத்தொடரை இந்திய அணி 5-0 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், 120 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்கலாம். கடைசியாக 2009 செப்டம்பர் மாதம் இந்திய அணி முதலிடத்தை இழந்தது. இதன்மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறலாம்.

ஒருவேளை இந்திய அணி 0-5 என தொடரை இழந்தால் 112 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு தள்ளப்படும். இலங்கை அணி 116 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறும்.

சமீபத்தில் இங்கிலாந்திடம் (4-0) ஒருநாள் தொடரை மோசமாக இழந்ததால் ஆஸ்திரேலிய அணியின் முதலிடத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முன்னேற்றம் தெரியும்

இந்திய கேப்டன் தோனி கூறுகையில்,""இலங்கை தொடர் மிகவும் சவாலானது. "பீல்டிங்' உள்ளிட்ட சில துறைகளில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்பதை இத்தொடரின் முடிவில் அறிந்து கொள்ளலாம். தற்போது 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். "டுவென்டி-20' உலக கோப்பை பற்றி, சிந்திக்கவில்லை. வீரர்களின் உடற்தகுதி சிறப்பாகவுள்ளது. திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்,''என்றார்.