ராசி குணங்கள் மேஷம்
எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள்.
வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், ரோஸ்
ராசி குணங்கள் ரிஷபம்
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். நட்பு வட்டாரம் விரியும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
ராசி குணங்கள் மிதுனம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லை கள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்காலத்திற் கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், ஆரஞ்சு
ராசி குணங்கள் கடகம்
காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். பிற்பகல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்
ராசி குணங்கள் சிம்மம்
காலை 10.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மோதல்கள் வேண்டாமே. உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிரே
ராசி குணங்கள் கன்னி
எண்ணம்போல் செயல்பட வேண்டும்மென எண்ணுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சுமுகமான தேதீர்வு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாகனத்தை மாற்றுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
ராசி குணங்கள் துலாம்
பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பணஉதவி கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சி யுண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : கிளிப்பச்சை, ஊதா
ராசி குணங்கள் விருச்சிகம்
இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். அரசு காரியங்ளில் ஆர்வம் காட்டுவீர்கள். வயிற்றுவலி, தலைசுற்றல் விலகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்
ராசி குணங்கள் தனுசு
இன்று சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படு வீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி குணங்கள் மகரம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிளிப்பச்சை
ராசி குணங்கள் கும்பம்
காலை 10.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பிற்பகல் முதல் மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்
ராசி குணங்கள் மீனம்
காலை 10.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன


