Sat05252013

Last update01:21:52 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் இலங்கை LLRC பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் - OPA

LLRC பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் - OPA

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென சிவில் அமைப்பான தொழில்சார் நிறுவனப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சில முக்கியமான பரிந்துரைகள் தாமதமின்றி அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

இன நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை மேம்படுத்தக் கூடிய பல முக்கியமான பரிந்துரைகளை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்பையும், வலுவான முனைப்பையும் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து கொள்ளும் உரிமை, நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை, சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சுயாதீன பொதுச் சேவை ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, நீதிமன்ற சேவை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்க வேண்டுமென தொழில்சார் நிறுவனப் பேரவை தெரிவித்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

Entertainment