Thu05232013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா சினிமா செய்திகள் பாடல் வெளியீட்டு விழாவை புறக்கணித்த டைரக்டர், இசையமைப்பாளர்!

பாடல் வெளியீட்டு விழாவை புறக்கணித்த டைரக்டர், இசையமைப்பாளர்!

 

மீன்கொத்தி என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை அப்படத்தின் டைரக்டர் மற்றும் இசையமைப்பாளர் புறக்கணித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விழாவை

புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அன்புள்ள ரஜினிகாந்த், சோலைக்குயில், சித்திரைப்பூக்கள், தர்மபத்தினி, அன்பே உன் வசம் உள்பட பல படங்களை தயாரித்தவர், அழகன் தமிழ்மணி. இவர், `மீன் கொத்தி என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் அவருடைய மகன் அஜய் கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். தூத்துக்குடி படத்தை இயக்கிய சஞ்சய்ராம் இயக்கியிருக்கிறார். தினா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில், டைரக்டர் சஞ்சய்ராம் கலந்து கொள்ளவில்லை. தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் விழாவை புறக்கணித்ததாக கூறப்பட்டது. படத்தின் இசையமைப்பாளர் தினாவும் விழாவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.