Tue05212013

Last update04:27:02 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் உலகச்செய்திகள் சீனாவில் விமானக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

சீனாவில் விமானக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

சீனாவில் நடுவானில் விமானத்தை கடத்த முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டது.

அந்நாட்டின் உய்குர் என்ற பகுதியில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் சிலர்,தனி நாடு கோரி வருகின்றனர்.தனி நாடு கோருபவர்கள் அண்டை நாடுகளில் மறைந்து இருந்து , சீனாவில் குண்டு வெடிப்பு போன்ற நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதற்கிடையே,சின்ஜியாங் மாகாணத்தில் ஹோட்டன் என்ற இடத்திலிருந்து,உர்ம்குய் பகுதிக்கு,"டியான்ஜின்'ஏர் லைன்ஸ் விமானம் நேற்று புறப்பட்டது. புறப்பட்ட 10 நிமிடம் கழித்து, விமானத்தில் இருந்த ஆறு பேர், விமானிகளை மிரட்டி விமானத்தை வேறு இடத்துக்கு திருப்பிச் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

 

இதைத் தொடர்ந்து, விமானத்திலிருந்த இரண்டு பாதுகாவலர்கள், விமான ஊழியர் உள்ளிட்டோர் கடத்தல்காரர்களுடன் சண்டையிட்டனர்.

 

இந்நிலையில், விமானம் புறப்பட்ட ஹோட்டன் நகருக்கே திரும்பியது. விமானம் தரையிறங்கியதும், கடத்தல்காரர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கடத்தல்காரர்களுடன் சண்டையிட்ட, இரண்டு பாதுகாவலர்கள் படுகாயமடைந்துள்ள னர். விமான ஊழியர் ஒருவரும், ஏழு பயணிகளும் லேசான காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சீன அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலதிக தகவல்களை தெரிவிக்க, சீன அதிகாரிகள் மறுத்து விட்டனர். _