கடந்த மாதம் இத்தாலி 'எமிலியா றொமானா' மானிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நகரான “MODENA” மக்களுக்கு
இத்தாலி றெயோ எமிலியாவில் வாழும் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை இன்று 16-06-12 பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று நிவாரணப் பொருட்களை “PROTEZIONE CIVILE” என்ற அரச அமைப்பின் செயலாளரிடம் கையளித்தனர்
அதன் பின் உரையாடிய“PROTEZIONE CIVIL”இண் செயலாளர்;; அவசர நிவரன உதவிகளை வழங்கிய தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு அவர்களது மனிதாபிமானத்தையும் பாராட்டினர் காரணம் இந் நில நடுக்கத்தில் 29 சிங்கள குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் இன்னமும் அதிகமான உதவிகளை தாம் எதிர் பார்ப்பதாகவும் மேற்கொண்டு தமிழ் மக்களால் செய்யக்கூடிய உதவிகளை தாம் எதிர் பார்ப்பதாகவும் மிகவும் விரைவாக அதனைச் செய்யும் படியும் கேட்டுக்கொண்டார்.
எனவே இவ் நிவாரணப் பொருட்களை தந்துதவிய அனைத்துத் தமிழ் மக்களுக்கும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையானது தனது நன்றியைத் தெரிவித்துக்கௌ;கின்றது. மேலும் உதவிகள் தேவைப்படுவதால் அனைத்து மக்களும் உங்களர்ல் முடிந்த உதவிகளை மிக விரைவாக செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
தொடர்புகளுக்கு இத்தாலி ஈழத் தமிழர் மக்களவை
நா.லலிதகுமார்- 3289553462



