Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் இலங்கை அனைத்துலக நாணய நிதியத்திடம் மீண்டும் கையேந்துகிறது சிறிலங்கா

அனைத்துலக நாணய நிதியத்திடம் மீண்டும் கையேந்துகிறது சிறிலங்கா

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து சிறிலங்கா மீண்டும் நிதியுதவி கோரியுள்ளது.

சிறிலங்காவுக்கு அனைத்துலக நாணய நிதியம் வழங்கிய 2.6 பில்லியன் டொலர் நிதியுதவியின் இறுதிக் கட்டமான 400 மில்லியன் டொலரை விடுவிப்பதற்கு முன்னதாக, அனைத்துலக நாணய நிதியத்தின அதிகாரிகள் குழுவொன்று களஆய்வை மேற்கொள்ள சிறிலங்கா வந்திருந்தது.

11 நாள் பயணத்தை மேற்கொண்ட இந்தக் குழுவினரிடமே சிறிலங்கா புதிய நிதியுதவிக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக, கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அனைத்துலக நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்கான பயணக் குழுவின் தலைவர் ஜோன் நெல்ம்ஸ், பல பத்தாண்டு கால உள்நாட்டுப் போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவதற்கு சிறிலங்கா மேலும் நிதி உதவிகளைக் கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும் எவ்வளவு நிதியுதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது என்ற தகவலை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

அதேவேளை, சிறிலங்கா மத்திய வங்கி கூறியது போன்று இந்த ஆண்டில் 7.2 வீத பொருளாதார வளர்ச்சியை சிறிலங்கா எட்ட முடியாது என்றும், 6.75 வீத பொருளாதார வளர்ச்சியையே இந்த ஆண்டில் அனைத்துலக நாணய நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில கொள்கை ரீதியான நடவடிக்கைகளால் இந்த ஆண்டில் சிறிலங்காவின் பணவீக்கம் 9.5 வீதமாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வெளிநாட்டு நாணயக் கையிருப்பை பேணுவதற்கு, குறைந்தது 500 மில்லியன் டொலரை அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து கோரியுள்ளதாக சிறிலங்கா நிதியமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.