சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை தமது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, தற்போது கணணி விளையாட்டுக்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறானவர்களை மையமாக வைத்து கணணி விளையாட்டுக்களும், அவற்றிற்கான சாதனங்களும் நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டும் வருகின்றன.
இதன் அடிப்படையில் தற்போது 20 பொத்தான்களைக் கொண்ட G600 மவுஸ்கள் கணணி விளையாட்டிற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள குறித்த மவுஸ்கள் 6.5 அடிகள் நீளமான கேபிள்களை இணைத்து இயக்கக்கூடியன. இவற்றின் பெறுமதி 80 அமெரிக்க டொலர்கள் ஆகும்.



