ஜகார்த்தா: இந்தோனேஷியா ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் செய்னா நேவல் முன்னேறினார்.
இந்தோனேஷியாவில் நடக்கும் இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் செய்னா, சீனாவின் வாங்கை சந்தித்தார். முதல் செட்டை 21-17 என்று செய்னா கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சீனாவின் வாங் 23-21 என வென்றார். வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது செட்டில் செய்னா 21---19 என வெற்றி பெற்றார். முடிவில் செய்னா 21-17, 21-23, 21-19 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் காஷ்யப், டென்மார்க்கின் ஹான்ஸ்சை சந்தித்தார். முதல் செட்டை 21-15 என்று காஷ்யப் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய காஷ்யப் 21-14 என வென்றார். முடிவில் காஷ்யப் 21-15, 21-14 என்ற நேர் செட்களில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.



