த்ரிஷா, அனுஷ்கா ஆகியோருடன் ஜோடி போட்ட கணேஷ் வெங்கட்ராம் அடுத்து ஸ்ரேயாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அபியும் நானும் படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக
நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம். தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன் படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து பிரபலமானார். தற்போது பனித்துளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழியில் உருவாக இருக்கும் சந்திரா என்ற படத்தில் ஸ்ரேயாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் கணேஷ். இந்தியாவின் கடைசி இளவரசியை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. இதில் இளவரசியாக ஸ்ரேயா நடிக்கிறார். ரூபா அய்யர் இயக்கும் இப்படத்தில் இரண்டு ஹீரோ. அதில் ஒருவர் கன்னட நடிகர் பிரேம், மற்றொருவர் கணேஷ். படத்தில் கணேஷ் வெளிநாடு வாழ் இந்தியராக வருகிறார்.
இதுகுறித்து கணேஷ் கூறியுள்ளதாவது, இந்தபடத்தின் கதைப்பற்றி ரூபா கூறும்போது, ரொம்ப அருமையாக இருந்தது. அதனால் உடன் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன். சந்திரா படம் எப்போது தொடங்கும் என ரொம்ப ஆர்வமாய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


