Wed05222013

Last update03:52:35 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா சினிமா செய்திகள் பிரபு தேவாவுக்கு மயக்கம் தெளிய வேண்டும்: பாக்யராஜ் பேச்சு!

பிரபு தேவாவுக்கு மயக்கம் தெளிய வேண்டும்: பாக்யராஜ் பேச்சு!

 

சென்னையில் நடந்த ஆடியோ ரிலீஸ் ஒன்றில் பங்கேற்ற பாக்யராஜ், பிரபுதேவாவுக்கு மயக்கம் தெளிய வேண்டும் என்று கூறினார். முற்றிலும் புதுமுகங்களை வைத்து ரெயின்போ

கிரியேஷன்ஸ் சார்பில் ஆண்டனி எட்வர்டு தயாரித்துள்ள படம் ஏன் இந்த மயக்கம். இப்படத்தை ஷக்தி வசந்த் பிரபு என்பவர் இயக்கியுள்ளார். இவர் பிரபுதேவாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் சென்னையில் நடந்தது. இதில் பாக்யராஜ், பிரபுதேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் பாக்யராஜ் கலகலப்பாக பேசி அனைவரையும் கவர்ந்தார். அவர் பேசுகையில், முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி எட்வர்டு நன்றிக்குரியவர். இந்தக் காலத்தில் யார் நடித்தால் படம் வியாபாரமாகும் என்று படத்துக்கு உத்திரவாதம் பார்ப்பார்கள்.புதுமுகங்களை வைத்து உருவாகும் இப்படிப்பட்ட படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம். இப்படிப்பட்ட தயாரிப்பாளர் வரும்போது கொடுத்த வாய்ப்பை இயக்குநரும் மற்றவர்களும் காப்பாற்ற வேண்டும். அந்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொடுத்தால்தான் இன்றும் இவரைப் போல நிறைய பேர் வருவார்கள். இதை இயக்கும ஷக்தி வசந்த பிரபு இயக்குநர் பிரபு தேவாவிடம் பணியாற்றியவர் என்பதை அறிந்து சந்தோஷம். இவ்வளவு பிஸியான நேரத்தில் பிரவு தேவா தன் உதவியாளருக்காக இங்கு வந்திருப்பதிலிருந்து எந்த அளவுக்கு ஷக்தி வசந்த பிரபு தான் இயக்குநரிடம் பெயர் வாங்கியிருக்கிறார் என்பது புரியும். படத்தின் தலைப்பைப் பார்த்தும் பிரபுதேவாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. பிரபுதேவா இன்னும் பத்து வருஷம் தமிழ்நாட்டு பக்கம் வரமாட்டார் என்று சொல்கிறார்கள். அவரது மயக்கம் தெளிய வேண்டும். கூட இந்தியாவிலேயே இருக்கக் கூடாது. அவரது இயக்கத்தில் தமிழில் வருஷம் இரண்டு படங்கள் வரவேண்டும் என்று கூறியதுடன் படக்குழுவினரையும் வாழ்த்தினார்.

பிரபுதேவா பேசும்போது, இந்த ஷக்தி வசந்த பிரபுவின் பெயர் என்னைப் பொறுத்த வரை கலை என்பதுதான். கலை... கலை என்றுதான் நான் கூப்பிடுவேன். இவர் பயங்கர உழைப்பாளி. இரவு பகல் என்று பார்க்காமல் கடுமையாக உழைப்பவர். அதை நேரில் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர் படமெடுத்திருக்கிறார். நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள். மீண்டும் இப்படத்தின் வெற்றி விழாவில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.