Tue06182013

Last update06:20:44 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back ஜோதிடம் சின்னத்திரை தினபலன் தினபலன் (14.06.2012)

தினபலன் (14.06.2012)

ராசி குணங்கள்மேஷம் -கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். தாழ்வுமனப்பான்மை வரக்கூடும்.

அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மதியம் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:வைலெட்,இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் ரிஷபம்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ்,வைலெட்

ராசி குணங்கள் மிதுனம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ப்ரெவுன்

ராசி குணங்கள் கடகம்

பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள்,பிங்க்

ராசி குணங்கள் சிம்மம்

மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து எதிலும் தெளிவு பிறக்கும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ப்ரவுன்

ராசி குணங்கள் கன்னி

குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழியில் மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,பச்சை

ராசி குணங்கள் துலாம்

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண்,ப்ரவுன்

ராசி குணங்கள் விருச்சிகம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை,இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் தனுசு

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண்,ஆரஞ்சு

ராசி குணங்கள் மகரம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. ஓரளவு பணவரவு உண்டு ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.  அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே,மஞ்சள்

ராசி குணங்கள் கும்பம்

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா

ராசி குணங்கள் மீனம்

மதியம் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். உடல் நலம் பாதிக்கும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள்,கரு நீலம்