Fri05242013

Last update02:58:47 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா சினிமா செய்திகள் முன்னாள் கணவரிடம் மகளை ஒப்படைத்தார் ஊர்வசி!

முன்னாள் கணவரிடம் மகளை ஒப்படைத்தார் ஊர்வசி!

முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ஊர்வசி. கன்னடம், மலையாளம் உள்பட ஏராளமான படங்களிலும் நடித்தார். மலையாள நடிகர் மனோஜ் கே.

ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்ட, இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதனிடையே கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இருப்பினும் 2 மகள்களும் ஊர்வசி பாதுகாப்பில் இருந்தனர்.

இதையடுத்து தனது இரு மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தர விட வேண்டும் என்று மனோஜ் கே.ஜெயன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரண்டாவது மகள் குஞ்சாச்சாவை மட்டும் மனோஜ் கே.ஜெயனிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து ஊர்வசி கோர்ட்டு உத்தரவுக்கு பணிந்து இளைய மகளை அவரிடம் ஒப்படைத்தார்.

 

Entertainment