Thu06202013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டி: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டி: இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

புதுடில்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக கோல்கீப்பர் பரத் சேத்ரி நியமிக்கப்பட்டார்.

லண்டனில் வரும் ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் போட்டி துவங்குகிறது. இதில் 8 முறை தங்கம் வென்ற பெருமைமிக்க இந்திய ஹாக்கி அணி பங்கேற்கிறது. இதற்கான 16 பேர் கொண்ட அணியை "ஹாக்கி இந்தியா' அமைப்பு நேற்று அறிவித்தது. யுவராஜ் வால்மீகி, ருபிந்தர் பால் சிங் நீக்கப்பட்டு, அனுபவ வீரர்களான இக்னேஸ் டர்க்கி, குர்விந்தர் சிங் சாண்டி வாய்ப்பு பெற்றனர். சர்வன்ஜீத் சிங், கோத்தாஜித் சிங்கும் ஆகிய இருவரும் லண்டன் செல்வர். 16 பேரில் யாருக்காவது பெரிய அளவில் காயம் ஏற்பட்டால், இவர்கள் அணியில் சேர்க்கப்படுவர்.

16 வீரர்கள் கொண்ட அணி:

பரத் சேத்ரி(கேப்டன்), சர்தார் சிங்( துணைக் கேப்டன்), சுனில், சந்தீப் சிங், ஸ்ரீஜஸ், ரகுநாத், இக்னேஸ் டர்க்கி, குர்பாஜ் சிங், பிரேந்த்ரா லக்ரா, மன்பீரித் சிங், சிவேந்திரா சிங், குர்விந்தர் சிங் சாண்டி, டேனிஷ் முஜ்தபா, துஷார் கண்டேகர், தரம்வீர் சிங், உத்தப்பா.