Fri05242013

Last update11:15:36 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் இலங்கை அமெரிக்காவிற்கு தனியான செயற்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது – ஐ.தே.க

அமெரிக்காவிற்கு தனியான செயற்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது – ஐ.தே.க

அமெரிக்காவிற்கு தனியான செயற் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகள் தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவிற்கு சமர்ப்பித்த செயற் திட்டம் பற்றி அம்பலப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஏன் உண்மையான திட்டத்தை வெளியிட தயங்குகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் செயற் திட்டம் தொடர்பில் சிவில் சமூகத்துடன் கலந்தாலோசித்து, பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட Nவுண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Entertainment