Tue05212013

Last update04:18:17 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா சினிமா செய்திகள் நியூயார்க் திரைப்பட விழாவில் 3

நியூயார்க் திரைப்பட விழாவில் 3

3 படம் நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறது. 3 படம் மூலம் இயக்குநராக அவதரித்தவர் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்தின் நாயகனாக தனது கணவர் தனுஷை நடிக்க

வைத்தார். நாயகியாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடித்தார். இப்படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தில் உள்ள ஒய்திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுக்க பிரபலமாகி பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இதனால் இந்தபடத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. சமீபத்தில் வெளியான இப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் நியூயார்க் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறது. இதற்காக ஆயத்தமாகி வருகிறார் ஐஸ்வர்யா.

இதுகுறித்து 3 படத்தின் டைரக்டரும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா கூறுகையில், என்னுடைய முதல்படமே சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறது என்று எண்ணும்போது ரொம்ப பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்தவிழாவில் பங்கேற்பதற்காக நான் நம்ம நாட்டு பாரம்பரிய உடையில் செல்ல இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.