Thu05232013

Last update03:52:35 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு பொது சென்னையில் சர்வதேச "டுவென்டி-20'

சென்னையில் சர்வதேச "டுவென்டி-20'

புதுடில்லி: சென்னையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் சர்வதேச "டுவென்டி-20' போட்டி செப்., 11ம் தேதி நடக்கவுள்ளது.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் கடைசி கட்டத்தை எட்டிய நிலையில், இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச தொடருக்கான அட்டவணையை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நேற்று அறிவித்தது. இதில் 2012 ஆக., முதல் 2013 மார்ச் வரை இந்தியாவில் 10 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் நான்கு சர்வதேச "டுவென்டி-20' போட்டிகள் உள்ளிட்ட மூன்று சர்வதேச தொடர்கள் நடக்கவுள்ளன.

ஆகஸ்ட் மாதம் இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், இரண்டு சர்வதேச "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டிகள் முறையே ஐதராபாத் (ஆக., 23-27), பெங்களூரு (ஆக., 31 - செப்.,4) ஆகிய இடங்களில் நடக்கிறது. முதல் "டுவென்டி-20' போட்டி விசாகப்பட்டணத்தில் செப்., 8ம் தேதி, இரண்டாவது "டுவென்டி-20' போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்., 11ம் தேதியும் நடக்கவுள்ளது.

இத்தொடருக்கு பின், இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க இலங்கை செல்கிறது.

அதன்பின், இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், இரண்டு சர்வதேச "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ., 15ம் தேதி ஆமதாபாத்தில் துவங்குகிறது. மற்ற டெஸ்ட் போட்டிகள் மும்பை (நவ., 23-27), கோல்கட்டா (டிச., 5-9), நாக்பூர் (டிச., 13-17) ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. "டுவென்டி-20' போட்டிகள் புனே (டிச., 20), மும்பை (டிச., 22) மைதானங்களில் நடக்கவுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சொந்த ஊர் செல்ல உள்ள இங்கிலாந்து அணி, 2013 ஜனவரி மாதம் மீண்டும் இந்தியாவில் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ராஜ்காட்டில் ஜன., 11ம் தேதி நடக்கிறது. மற்ற போட்டிகள் முறையே கொச்சி (ஜன., 15), ராஞ்சி (ஜன., 19), தரம்சாலா (ஜன., 23), மொகாலி (ஜன., 27) ஆகிய இடங்களில் நடக்கிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.