Tue06182013

Last update06:20:44 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா சினிமா செய்திகள் களவாணி விமல் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆனார்!

களவாணி விமல் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆனார்!

களவாணி படத்தில் ஒரு எதார்த்தமான நடிப்பாலும், வாகை சூடவா போன்ற மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படங்களில் நடித்து வந்தவர் விமல். தற்போது வெளிவந்த கலகலப்பு படத்திலும்

கும்பகோணம் பின்னணி கதை தான். இதையடுத்து விமல் நடித்து வெளிவரப்போகும் படம் இஷ்டம். தெலுங்கில் ஏமாயிந்தி ஈ வேலா என்ற படமே தமிழில் இஷ்டம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படம் பற்றி டைரக்டர் பிரேம் நிஷார் கூறுகையில், இதுவரை பார்த்த விமலை, இஷ்டம் படத்தில் பார்க்க முடியாது. அவருடைய ஸ்டைலையே மாற்றி இருக்கோம். முதல்முறையாக அவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ரோலில் நடித்து உள்ளார். இதற்காக மும்பையில் இருந்து பிரத்யேகமான ஹேர் ஸ்டைலிஸ்ட் வரவழைக்கப்பட்டு மொத்தமாக அவரை மாற்றியுள்ளோம். அவர் டிரஸ், ஹேர் ஸ்டைல் என்று பார்க்கவே ரொம்ப புதுசா இருக்கும். கதைப்படி பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் இளைஞன் விமல், ஹீரோயின், திருச்சியில் இருந்து வேலை தேடி வரும் பெண். ரெண்டு பேரும் எப்படி சந்திக்கிறாங்க, இந்த வேலை பார்க்கும் மக்கள், அவசரத்தில் எடுக்கும் முடிவு, காதல் கல்யாணம், வேலை என்று அவர்கள் பிரச்னை என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்தப்படத்தில் சொல்லி இருக்கேன்.

படத்தின் நாயகியாக காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் நடிச்சிருக்காங்க, தெலுங்கிலும் அவங்கதான் நடிச்சிருக்காங்க, அதனால தமிழில் இப்படத்தை நிஷாவை வைத்து எடுக்க ரொம்ப ஈஸியா‌ போச்சு. ரொம்ப நல்லா புரிஞ்சுகிட்டு நடிச்சாங்க. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரைக்கும் சந்தானத்தின் காமெடி முழுமையாக ரசிக்கிற மாதிரி இருக்கும். படத்தில் இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகள் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். படத்தில் இரண்டு பாடல்களை சுவிஸில் எடுத்து இருக்கோம். அன்பே இது மெய்யா என்ற பாடலை, ஜேம்ஸ்பாண்ட் கடைசியாக செட்டில்ஆன இடத்தில் எடுத்தோம். அப்புறம் நானின்றி நானாக என்ற பாட்டை சாப்ளின் வாழ்ந்த இடத்தில், அவருக்கு சிலை வைத்த இடத்தில் எடுத்தோம். இதில் விமலுக்கு சாப்ளின் போல டிரஸ் எல்லாம் போட்டு அந்த பாட்டை எடுத்திருக்கோம். மொத்தத்தில் இஷ்டம் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு சந்த‌ோஷமும், பெற்றோருக்கு ஒரு செய்தியும் படத்தில் இருக்கும் என்றார்.