நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படம் முகமூடி. ஹாலிவுட்டில் சூப்பர் மேன் போன்ற கதையம்சம் கொண்ட இப்படத்தின் வில்லனாக நரேன் நடிக்கிறார். ஓராண்டுக்கு மேலாக நடைபெறும்
இப்படத்தின் படப்பிடிப்பு .90 சதவீதம் நிறைவுற்ற நிலையில் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகள் காரைக்காலில் படமாக்கப்பட்டு வருகிறது.
சுமார் 250 தொழிலாளர்கள், பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியோடு படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது ஜீவாவிற்கு தோள்பட்டையில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் தாங்க முடியாத வலியையும் பொறுத்துக் கொண்டு அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்னால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என்று கருதி, வலியை வெளிக்காட்டாமல் தனது காட்சிகளை மிகச் சிறப்பாக ஜீவா நடித்து கொடுத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.


