முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் மகிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி இந்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நேற்று கட்டார் நாட்டுக்கு செல்லும் முன்னர், குறித்த ஆவணங்களில் கையெழுத்திட்டு அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி மகிந்தர ராஜபக்ஷ நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கட்டார் நோக்கி புறப்பட்டுச் சென்றார். கட்டார் மன்னரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.



