Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் இந்தியா பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்!மரணத்தை வென்ற மாவீரன்:- நெடுமாறன்!

பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்!மரணத்தை வென்ற மாவீரன்:- நெடுமாறன்!

பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை 'பொய்களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன்,

'மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தக மாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்!

பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன்.

வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி... தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப் போராடிய பிரபாகரனின் பெருமை பாடும் புத்தகம் அல்ல இது.

பிரபாகரன் என்கிற தனி மனிதன், தமிழர் எழுச்சியின் வடிவமாக எப்படி உருவெடுக்கிறார் என்பதை வலுவாகச் சொல்கிறார் நெடுமாறன்.

ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களுக்கு உதார ணமாக உலக அளவில் சொல்லப்படுவது, ஹென்றி வோல்கவ் எழுதிய 'மார்க்ஸ் பிறந்தார்’.

அதேபோல், தமிழில் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம். அந்த அளவுக்கு பிரபாகரனின் ஒவ் வோர் அசை வையும் தூரத்தில் இருந் தபடியே துல்லியமாகக் கவனித்து எழுதி இருக்கிறார் நெடுமாறன்.

பிரபாகரனுக்குத் தோள் கொடுத்த தோழர்கள் யார், உடனிருந்து துரோகம் செய்தவர்கள் யார், எளிய மனிதராக வளர்ந்த பிரபாகரன் தத்துவ விசாரணைகள் செய்யும் ஆய்வாளரைப் போல எப்படி எல்லாம் பேசுவார்,

உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருக்கும் ஆயுதங்களை வன்னிக் காடுகளுக் குள் வைத்தே தயாரிக்கும் வித்தையை அவர் கற்றது எப்படி,

கெரில்லா யுத்தம் மூலமாக சிங்கள அரசாங்கத்துக்கு சிம்ம சொப்பனமாக மாறியது எப்படி?,

அந்நாடு அத்தனை படைகளை உருவாக்கியும் அதே அச்சுறுத்தலை தக்கவைத்துக்கொள்ள சாத்தியமானது எவ்வாறு... என்றெல்லாம் நெடுமாறனின் வார்த்தைகளில் படிக்கும்போது புதிய புறநானூறாக இருக்கிறது.

ஆயுதப் போராட்டத்தில் அழித்தொழிப்புக் காரியங்களுக்கான அவசியக் காரணங்களையும் அந்த பேதத்தை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் உருவாக்கிய விதத்தையும், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மனிதன் இல்லை என்றால் பிரபாகரன் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகின்றன பல தகவல்கள்.

ஆயுத பலத்தால் அடக்க முடியாத பிரபாகரனை, பதவிஆசை காட்டி மயக்க முயன்றபோதும் வித்தியாசமான மனிதனாய் அவர் வெளிப் பட்ட தையும் பார்க்க முடிகிறது.

சங்ககாலத் தமிழ் மன்னர்கள் கூட தரைப்படை, கப்பல் படை மட்டும்தான் வைத்திருந்தார்கள். வான் படையும் சேர்த்து அமைத் தவர் என்று, பிரபாகரனைச் சொல்லும் நெடுமாறன், பெண் படை அணியின் உருவாக்கத்தைப் பெருமிதத்துடன் பதிவு செய்து இருக்கிறார்.

பிரபாகரனின் நண்பர்கள் சொன்னது மட்டும் அல்ல, எதிரிகள் சொன் னதும் இதில் நிறைய இருக்கின்றன. அத்தனை பேர் புகைப்படங்களையும் தேடித் தேடிச் சேர்த்துள்ளார்.

பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை 'பொய்களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன், 'மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தக மாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்!

ஜூனியர் விகடன்