Sun05262013

Last update06:21:59 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் உலகச்செய்திகள் தெளிவான வரைவுத் திட்டமொன்றை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது

தெளிவான வரைவுத் திட்டமொன்றை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது

தெளிவான வரைவுத் திட்டமொன்றை இலங்கையிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்திற்கு பதிலளிக்கக் கூடிய வகையில் தெளிவான வரைவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் எதிர்பார்ப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெளிவான திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்காவிட்டால் அதனை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் இடையில் நாளைய தினம் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்த வேண்டுமென அமெரிக்க தமிழ் அரசியல் செயற்திட்ட கமிட்டி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் அமெரிக்க செனட்டர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது குறித்த கமிட்டியின் உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

 

 

Entertainment