ஒரு வழியாக சினேகா - பிரசன்னா திருமணம் நல்லபடியாக முடிந்து, வரவேற்பும் அமர்க்களமாய் முடிந்துவிட்டது. இருதினங்களுக்கு முன்னர் குலதெய்வ கோயிலுக்கும் சென்று
வழிபாடு செய்துவிட்டு வந்துள்ளனர் புதுமன தம்பதியர். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு ஏற்கனவே அறிவித்தப்படி சில காலம் அதாவது 6 மாதத்திற்கு சினேகாவும், பிரசன்னாவும் தனிக்குடித்தனம் இருக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக தி.நகர் வீட்டில் இருவரும் தனிக்குடித்தனம் இருந்துவிட்டு பின்னர் பிரசன்னா குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ திட்டமிட்டுள்ளனர். இதனிடையே திருமணத்திற்கு முன்பு சினேகாவும், பிரசன்னாவும் ஒப்புக்கொண்ட சில படங்களின் சூட்டிங் இருப்பதால் தங்களது ஹனிமூன் பயணத்தை தற்காலிகமாக தள்ளிப்போட்டுள்ளனர் இருவரும்.


