Wed05222013

Last update02:53:51 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back செய்திகள் செய்திகள் இந்தியா நான்காம் ஈழப்போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிய பசில் ராஜபக்ஷ?

நான்காம் ஈழப்போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிய பசில் ராஜபக்ஷ?

நான்காம் ஈழப் போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

பசில் ராஜபக்ஷ மாற்றத்தை ஏற்படுத்தினார் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையிலும் இந்தியா யுத்தத்திற்கு ஆதரவா செயற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து, இராணுவ ரீதியாக இல்லாததொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு இந்தியா மாறியிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோதாவின் போர் என்ற நூல் தொடர்பில் இந்தியாவின் முன்னணி ஊடகமொன்று வெளியிட்டுள்ள கட்டுரையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் இறுதியில் இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் மாற்றம் தெட்ட தெளிவாக வெளிப்பட்டிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு மனிதாபிமான நிலைமைகள் குறித்து கவனிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அதேவேளை, ஈழப்போர் இராணுவ ரீதியாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென இந்தியா வலிறுத்தி வந்தது.

முக்கியமாக இராணுவ ரீதியான நடவடிக்கைகளின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என மிக நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த இந்தியா, அந்தக் கொள்கையினை கைவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.