Wed06192013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back சினிமா சினிமா கிசுகிசு எதிர்மறையாக நடித்தாலும் நடிகையாக பாராட்டுகிறார்கள்: ரித்திகா ஸ்ரீனிவாஸ்!

எதிர்மறையாக நடித்தாலும் நடிகையாக பாராட்டுகிறார்கள்: ரித்திகா ஸ்ரீனிவாஸ்!

வழக்கு எண் 18/9 படத்தில் எதிர்மறையான கேரக்டரில் நடித்தாலும், எனது கேரக்டரை புரிந்து கொண்டு ரசிகர்கள் பாராட்டுகிறார்கள் என்று பெருமைப்படுகிறார் ரித்திகா ஸ்ரீனிவாஸ். பாலாஜி

சக்திவேலின் இயக்கத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற படம் வழக்கு எண் 18/9. முற்றிலும் புதுமுகங்கள் நடித்து இருக்கும் இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் தவிர படத்தில் நடித்த அத்தனை பேரும் அனைவராலும் பாராட்டப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளித்தாளாளாராக, மந்திரிக்கு மிகவும் வேண்டப்பட்டவராக வரும் ரித்திகா ஸ்ரீனிவாஸை பாராட்டாதவர்களே கிடையாது. யாருடா இது இவ்வளவு அருமையான நடிகை புதுமுகமா, இல்லை வழக்கம் போல வேற்று மாநில வரவா என்று குழம்பித்தான் போவார்கள். ஆனால் அவர் 150 வருடங்களாக மும்பையில் குடியிருக்கும் பச்சை தமிழ்க்குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

சென்னையில் ‌இன்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு, மீடியா தொடர்பான படிப்பை லண்டனில் முடித்து, தொடர்ந்து ஐஸ் பிரேக்கர்ஸ் என்கிற சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து மீடியா சமபந்தமான கலை நிகழ்ச்சிகளை துபாயில் நடத்திக் கொண்டிருப்பவர். பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகர், நடிகையரையும் இவருக்கு நன்கு தெரிந்தவர்கள்தான். 40 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார்.

வழக்கு எண் படம் தனக்கு எப்படி அமைந்தது என்றும், அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் ரித்திகா ஸ்ரீனிவாஸ் பேட்டியளித்துள்ளார். அதில், வழக்கு எண் 18/9 படத்திற்காக நடிக நடிகையர் தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில், அங்கே சென்று இயக்குனர் பாலாஜி சக்திவேலின் உதவியாளர்களிடம் நடித்துக் காண்பித்துக் கொண்டிருந்ததை போகிற போக்கில் பார்த்துச் சென்ற மாத்திரத்திலேயே இயக்குனர் பாலாஜி சக்திவேல் என்னை தேர்வு செய்தார். படமும் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது இருந்தாலும், அழுத்தமான கேரக்டர்கள் எதுவும் அமையாததால் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

வழக்கு எண் 18/9 படத்தை பொறுத்தமட்டில் நான் எதிர்மறையான கேரக்டரில் நடித்திருந்தாலும் எனது கேரக்டரை உணர்ந்து ரசிகர்கள் நிறைய பேர் பாராட்டினார்கள். வீட்டிலும் கூட எனது நடிப்பை பாராட்டினார்கள். சினிமா பார்க்காத எனது கண‌வரே, தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நிறைய முறை தியேட்டரில் படம் பார்த்து உள்ளார். சிறந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் மற்றொரு சிறந்த இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் நான் அறிமுகமானதில் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சி.

என்னை பொறுத்தவரைக்கும் நான் வீட்டிலும் பாஸ், வெளியிலும் பாஸ் என்று கூறி சிரித்தார் ரித்திகா ஸ்ரீனிவாஸ்.